News

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன்?

Published

on

விஜய் நடித்து 2012-ல் திரைக்கு வந்த திரைப்படம் துப்பாக்கி. விஜய் வெற்றி படங்கள் பட்டியலில் துப்பாக்கி முக்கியமான திரைப்படமாக அமைந்தது. விஜய் ராணுவ உளவு அதிகாரியாக வந்தார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவிருந்தார்.

துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடப்பதாக ஏற்கனவே பேசப்பட்டது. இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது:- துப்பாக்கி 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது. இரண்டாம் பாகம் உருவாகும்போதே அதை முதல் பாகத்துடன் கண்டிப்பாக ஒப்பிட்டு பேசுவார்கள். இரண்டாம் பாகம் கதைக்கான பொறி தோன்றும்போது எடுப்பேன் என்றார்.

இந்தநிலையில் முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய் நடிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் ஒன்று வலைத்தளாத்தில் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே முந்தை விஜய்யின் 65-வது படத்தை முருகதாஸ்தான் இயக்குவதாகவிருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கும் முருகதாஸ்க்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்படத்திலிருந்து விலகினார் முருகதாஸ். அவருக்கு பதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது விஜய் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Trending

Exit mobile version