News
நீங்கள் வகுத்த பாதை விதை நீங்க போட்டது கமலுக்கு நன்றி சொன்ன சூர்யா !

சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடித்து இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய்பீம். 1990-களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட உண்மை நிகழ்வு இந்த திரைப்படம்.
இந்த படத்தை பார்த்த உலகநாயகன் கமல் ஹாசன் பதிவிட்டுள்ள டுவிட்டத் பதிவில் ஜெய் பீம் படம் பார்த்தேன் என் கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தியிருந்தீர்கள். இயக்குநர் ஞானவேல் பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த பதிவை பார்த்த சூர்யா அவர்கள் கமல்ஹாசனுக்கு நன்றி சொல்லும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் எல்லாம் நீங்கள் வகுத்த பாதை விதை நீங்கள் போட்டது உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார் !