News

சூர்யாவுக்கு ரோலக்ஸ் கை கடிகாரம் பரிசளித்த கமல்ஹாசன் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய்சேதுபதி, பஹத் பாசில், நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’

வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் 5 நாட்களில் ₹200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமான நேற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கி ₹70 லட்சம் மதிப்பில் ஒரு காரை பரிசாக கொடுத்தார்.

அது மட்டுமில்லாமல் துணை இயக்குநர்கள் 13 நபர்களுக்கு TVS Apache RTR 10 பைக்குகளை பரிசாக கொடுத்தார் உலக நாயகன் கமல்ஹாசன்.

இந்த நிலையில் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக சம்பளம் எதும் சூர்யா வாங்கவில்லையாம் என்பதை கமல்ஹாசன் நேற்று நன்றி கூறி தெரிவித்து வீடியோ பதிவில் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று சூர்யாவிற்கு கமல்ஹாசன் மிகவும் விலை உயர்ந்த ரோலக்ஸ் கை கடிகாரத்தை பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பில் சூர்யாவுடன் தந்தை சிவக்குமார் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version