News
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவு !

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரம்மண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2 திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனோடு, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம் என பல ஏளாரமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இதில் முக்கியமான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு சூரத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் மிக விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.