News
மிகப்பெரிய தொகைக்கு விலை போன விக்ரம் இந்தி டப்பிங் !

மாநகரம், கைதி, மாஸ்டர், படங்களை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் சென்னையில் ஆரம்பிக்க உள்ளது.
கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி மலையால நடிகர் பகத் பாசில் ஆகியோர் மற்றும் நரேன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு அனைத்து மொழி திரைப்பட துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்தியில் விக்ரம் படத்தை டப்பிங் செய்து வெளியிடுவதற்காக உரிமையை வாங்க கடும் போட்டா போட்டி நிலவி வந்தது. தற்போது இந்தி டப்பிங் உரிமையை ரூ.37 கோடிக்கு விலைபோயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளாது.
கமல் ஹாசனின் பல படங்கள் இந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். அதனுடன் இந்த விக்ரம் படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகப்பெரிய விலை என்கிறது சினிமா வட்டாரம். இது போல தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளுக்கான டப்பிங் உரிமை மற்றும் டிஜிட்டல், தொலைக்காட்சி உரிமைகளை வாங்கவும் பலர் விலைபேசி வருகிறார்கள்.