News

கமல்ஹாசனின் விக்ரம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Published

on

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம், ’விக்ரம்’. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன், செம்பன் வினோத், அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் ‘விக்ரம்’ உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3-ம் தேதி முதல்” என்று பதிவிட்டுள்ளார். படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Trending

Exit mobile version