News

கமல்ஹாசனின் விக்ரம் படப்பிடி நிறைவு பெற்றது !

Published

on

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘விக்ரம்’ இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர் நேஷனல் தயாரிக்கிறது.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி மற்றும் ஷிவாரானி நாரயரணன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. படப்பிடிப்பை முடித்த கமல்ஹாசன் மற்றும் படக்குழுவினர் கேட் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏப்ரல் 28-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version