English
பாபநாசம்-2ம் பாகத்தை ஒரு மாதத்தில் நடித்து முடிக்க கமல் யோசனை !
மோகன்லால் – மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து கமல்ஹாசன் மற்றும் கெளதமி இணைந்து நடித்தனர்.
இந்த வருடம் மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியானது. இந்த படம் தற்போது தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்யவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழில் பாபநாசம்-2 பாகமாக ரீமேக் செய்யபடுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து கமல்ஹாசனுடன் பேச திரிஷ்யம் -2 படக்குழுனர் முடிவெடுக்கவுள்ளனர். கமல்ஹாசன் சம்மதம் கொடுத்தால் திரிஷ்யம் இரண்டாம் பாகம் தமிழில் ரீமேக் செய்வேன் என்று படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறியுள்ளார்.
கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் இந்தியன் -2 மற்றும் விக்ரம் படங்களில் சில பிரச்சனை காரணமாக கமல்ஹாசனால் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறார்.இருந்தாலும் பாபநாசம் 2-ம் பாகத்தை ஒரு மாத காலத்திற்குல் நடித்து முடித்து விடலாம் என்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது.