News
777 சார்லி படத்தை பார்த்து கதறி அழுத முதல்வர் !
கன்னட இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் 777 Charlie. செல்லப்பிராணியான நாயை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருந்தது. கடந்த ஜூன் 10-ம் தேதி வெளியான இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக சார்லியாக நடித்திருக்கும் நாயின் நடிப்பை அனைவதும் பாராட்டி வருகின்றனர். அதுவும் இறுதியில் சார்லி இறந்து விடும் இந்த காட்சியை பார்க்கும் அனைவருமே கதறி அழுது விடுவார்கள்.
இந்த நிலையில் இப்படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திரையரங்கில் சென்று பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்து முடித்ததும் கதறி அழுதுள்ளார். காரணம் கடந்த ஆண்டு தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்த போனதை நினைத்து கதறி அழுததாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.