Connect with us
 

News

தளபதி விஜய்க்கு சிலை வைத்து அசத்தியது கர்நாடக விஜய் ரசிகர்கள் !

Published

on

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் தளபதி விஜய்யின் முழு உருவச் சிலையை வடிவமைத்து சென்னை கொண்டு வந்துள்ளனர்.

சென்னையில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நிரந்தரமாக அந்த அலுவலத்தில் வைக்கப்படும் என்று அறிவிதுள்ளது.

தற்போது இந்த சிலையை காண்பதற்காக விஜய் ரசிகர்கள் சென்னையின் பல இடங்களிலிருந்து பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்திற்கு வந்து பார்த்து செல்கிறார்கள்.

தற்போது இந்த சிலையின் முழு உருவ புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது தளபதி விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/reel/CRwMKurheRO/?utm_source=ig_web_copy_link