News
மீண்டும் சூர்யா தயாரிப்பில் நடிக்கும் கார்த்தி !
சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் மீண்டும் Karthi புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கார்த்தி மற்றும் அரவிந்த சாமி இருவரும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பி.சி.ஶ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை சூர்யா – ஜோதிகாவிம் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.