News

சியான் விக்ரம் நடிக்கும் 60-வது படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் !

Published

on

சீயான் விக்ரமின் 60-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவருகிறார். இதில் விக்ரமுடன் அவரின் மகன் துருவ் விக்ரமும் முதன் முறையாக இணைந்து நடித்து வருகிறார்கள். மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் லலித் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது.

விக்ரமுடன் நடிகை சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் இப்படம் குறித்த முக்கியமான் அப்டேட் ஒன்றை. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை சியான் 60 படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின்னர் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Trending

Exit mobile version