News
100 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் இணைந்த சர்தார் திரைப்படம் !

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி வெளியான திரைப்படம் சர்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கார்த்தின் மூன்றாவது தொடர் வெற்றி இது விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து சர்தார் திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் சர்தார் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு டொயோடா கார் ஒன்றை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.