News
கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு நிறுத்தம் !

கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் மற்றும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விருமன் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் படங்களின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்து விட்டு சர்தார் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதிலும் பெரும்பாலான காட்சிகளில் நடித்து முடித்து விட்டார்.
தற்போது சர்தார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளன்ரான ஜார்ச் சி வில்லியம்ஸுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சர்தார் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். அவருக்கு பூரண குணமடைந்து வந்ததும் மீண்டும் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இவருடன் நடிகைகள் சிம்ரன், ராஷி கன்னா மற்றும் ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார்கள்.