News
கவின் – ரெபா ஜான் ஜோடி சேரும் ஆகாஷ் வாணி வெப் தொடர் !

தமிழ் திரை வரலாற்றில் தற்போதைய காலகட்டம், இணைய தொடர்களின் பொற்காலமாக ஜொலித்து வருகிறது. பெரு தயாரிப்பு நிறுவனங்கள், பெரும் ஆளுமைகள் இணைவில், பிரமாண்ட உருவாக்கத்தில் உருவாகும் இணைய தொடர்கள், ஒன்றன் பின் ஒன்றாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அந்த வகையில், ரசிகர்களை கொள்ளை கொள்ளும் படைப்பாக, ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களில் இயக்குனர் அட்லீயிடம் உதவியாளாராக பணியாற்றிய Enoc Able, புத்தம் புதிய ரொமான்ஸ் இணைய தொடர் ஆகாஷ் வாணி-யை இயக்கவுள்ளார்.
Kaustubha Mediaworks அனுபவமிக்க இளம் திறமையாளர்களை ஒன்றிணைத்து, “ஆகாஷ் வாணி” இணைய தொடரை தயாரிக்கிறது. இளம்பெண்களின் உள்ளம் கவர்ந்த நாயகன் கவின் ‘ஆகாஷ்’ பாத்திரத்திலும், ஆல்பம் பாடலான ‘குட்டி பட்டாஸ்’ மூலம் கவனத்தை ஈர்த்த, இளைஞர்களின் கனவு தேவதை, ரெபா ஜான் ‘வாணி’ பாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.
அண்மையில் வெளியான தனுஷின் “ஜகமே தந்திரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சரத் ரவி & தீபக் பரமேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் வின்சா, அபிதா வெங்கட் ராமன், மேகி என்று அழைக்கப்படும் மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.