Connect with us
 

News

கவின் நடிப்பில் உருவாகவுள்ள சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம் !

Published

on

சூர்யா – ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் ஒபிலி என்.கிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஓபிலி என்.கிருஷ்ணன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி இப்படம் சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க நடிகர் கவின் நடிக்க போவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.