Reviews

கழுவேத்தி மூர்க்கன் – விமர்சனம் !

Published

on

Movie Details

நடிகர் அருள் நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஸ்காந்த், ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இயக்குநர் சை.கெளதம ராஜ் இப்படத்தை இயக்க ஒலிம்பியா மூவிஸின் அம்பேத் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெக்குப்பட்டி கிராமத்தில் மேலத் தெருவில் வசிப்பவர் அருள்நிதி அதே ஊரில் உள்ள கீழத்தெருவில் வசிப்பவர் சந்தோஷ் பிரதாப் இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது ஒரு நாள் காளை மாடு அருள்நிதியை குத்தி விட அவரின் உயிரை அப்போது காப்பாற்றுகிறார் சந்தோஷ் பிரதாப் இதனால்தான் இருவரும் உயிர் நண்பர்களாக மாறுகிறார்கள். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருப்பது அருள் நிதியின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை இவர்தான் அந்த ஊரின் தலைவர்.

அங்குள்ள அனைத்து மக்களையும் ஒரே மாதிரியாக மாற்ற வேண்டும் என்று நினைத்து பல வேலைகளை செய்து வருகிறார் சந்தோஷ் பிரதாப். அதே ஊரில் அருள் நிதியின் அப்பாவின் கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கும் ராஜசிம்மன் தனது செல்வாக்க காட்டவும் அதிகரிக்க செய்யவும் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்ற நடத்த முயற்சி செய்கிறான். அதற்காக மிகப்பெரிய போஸ்டர்கள் அடித்து அங்கு உள்ள எல்லா இடங்களிலும் வைக்க அதில் ஒரு போஸ்டர் மீது சந்தோஷ் பிரதாப் கிழித்து விட இதனை பார்த்த கட்சி தலைவர் ராஜசிம்மனின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து விடுகிறார். இது நடந்து சில நாட்களில் சந்தோஷ் பிரதாப் கொலையும் செய்யப்படுகிறார். அந்த கொலை பழி அருள்நிதி மேல் விழ தப்பித்து ஓடி மறைந்து வாழ்கிறார் அருள்நிதி போலீஸ் அருள்நிதியை தீவிரமாக தேடுகிறது. சந்தோஷ் பிரதாபை கொலை செய்தது யார் என்பதை கண்டு பிடித்து பழி வாங்கினாரா இல்லையா அருள் நிதிக்கு என்ன நடந்து என்பதுதான் படத்தின் மிதிக்கதை.

கிராமத்து வேடம் என்றால் மிகச் சரியாக பொருந்தக்கூடியவர் அருள்நிதி இப்படத்திலும் மூர்க்கசாமி என்ற அந்த கதாப்பாதிரத்தில் மிக அழகாக பொருந்தியிருக்கிறார். கிடா வெட்டு மீசை, எதிரிகளை அடித்து பறக்கவிடுவது, தூக்கி போட்டு எறிவது என படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை திரையில் தெறிக்க விடுகிறார்.

முதல் பாதி முழுவதும் துஷாரா விஜயனுடன் காதல் நட்பு என போகும் திரைப்படம் இரண்டாம் பாதி முழுவதுமே ஆக்ரோஷம் ரத்தம் அடிதடி மட்டுமே அதுவும் படத்தின் இறுதிக்காட்சி எல்லாம் கொடூரத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் நாயகியாக வரும் துஷாரா விஜயன் முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் செய்யும் கதா நாயகியாக துடிப்பான வேடத்தில் மிகவும் அழகாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள். அருள் நிதியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது இது போன்ற காதல் காட்சிகளை திரையில் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். முத்தம் கேட்கும் அருள்நிதிக்கு படத்தின் இறுதியில் முத்தம் கொடுத்து விட்டு துஷாரா பேசும் வசனம் கண்கலங்க வைக்கிறது.

அருள்நிதி நண்பனாக வரும் சந்தோஷ் பிரதாப் கீழ் சாதியில் இருக்கும் மக்கள் அனைவருமே படித்து முன்னேற வேண்டும் அதுக்காக தன்னால் முடிந்த அனைத்து நல்லதையும் செய்யும் ஒரு கதாப்பாத்திரமக சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அருள்நிதியின் அப்பா இவரை அவமான படுத்தும் காட்சிகளும் சரி நண்பன் அப்பாதானே என அனைத்தையும் பொறுத்துக்கொண்டு போகும் காட்சிகளிலும் அப்ளாஸ் வாங்குகிறார்.

படத்தின் வில்லனாகவும் அந்த ஊர் மாவட்ட செயலார் கதாப்பாத்திரத்தில் நடித்துக்கும் ராஜசிம்மன். சாதி வெறி பிடித்த அரசியல் வாதியை நம் கண் முன் நிறுத்தி வைக்கிறார்.

அருள்நிதியின் தந்தையாகவும் சகுனியாகவும் வரும் யார் கண்ணன், மாமாவாக வரும் முனிஷ்காந்த், எஸ்.பி ஆக வரும் சரத் லோகித்சவா, இன்ஸ்பெக்டர் பத்மன், சந்தோஷ், சந்தோஷ் பிரதாப் காதலியாக வரும் சாயாதேவி என அனைவதின் நடிப்பும் இப்படத்தில் கவனிக்க பட வேண்டியவவை.

படத்தின் ஆரம்பக் காட்சியில் இருந்த்ய் 30 நிமிடங்களுக்கு என்னதான் கதை என்று தெரியாமல் படம் நகர்கிறது. அதன் பின்னர் அதிரடியாக நம்மை படத்தின் கதைக்குள் அழைத்து செல்கிறார் இயக்குநர். அதன் பின்னர் விறுவிறுப்பு குறையாமல் நகர்கிறது படம்.

ஶ்ரீதர் ஒளிப்பதுவும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலமாக நிற்கிறது. அதே போல கணேஷ் குமாரின் சண்டைக்காட்சிகள் அனைத்துமே சும்ம மிரட்டுகிறது. ஒரு ஒரு சண்டைக்காட்சிகளிலும் மிரள வைக்கிறார்.

சாதியை, வர்க்கத்தை, பிரிவினையை மறைமுகமாக பேசும் தமிழ் படங்களுக்கு மத்தியில் அனைத்து தரப்பு மக்களையும் சரி சமமாக நடத்த வேண்டும் என்றும் இப்படம் சொல்வது ஆரோக்கியமான சினிமாவாகும் இது போன்ற படத்தை நாம் வரவேற்க்க வேண்டும்.
Kazhuvethi Moorkan Review By CineTime

[wp-review id=”46087″]

Trending

Exit mobile version