News
வாத்தி பட இயக்குநர் திருமணத்தில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் !
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி – பூஜா திருமணம் நேற்று ஜதராபாத்தில் நடைபெற்று. தனுஷ் இயக்கத்தில் இம்மாதம் 17-ம் தேதி வெளியாகும் வாத்தி படத்தின் இயக்குநர் இவர். இந்த திருமணத்திற்கு தெலுங்கு நடிகர் நிதின் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
2007-ம் ஆண்டு வெளியான நாபகம் என்ற படத்தின் மூலம் நடிகராக திரையிலத்திற்கு அறிமுகமானர் வெங்கு. அதனை தொடர்ந்து 2010-ம் ஆண்டு வெளியான சினேகா கீதம், 2011-ம் ஆண்டு வெளிவந்த இட்ஸ் மை லவ் ஸ்டோரி படங்களுக்கு வசனம் எழுதினார்.
முதன் முறையாக 2018-ம் ஆண்டு வெளியான தொலி பிரேமா என்ற படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மிஸ்டர் மிஞ்சு, ரங் தே படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.