Reviews

ரகு தாத்தா – விமர்சனம் !

Published

on

Cast: Keerthy Suresh, Suman Kumar
Production: Vijay Kiragandur
Director: Suman Kumar
Screenplay: Suman Kumar
Cinematography: Yamini Yagnamurthy
Editing: T.S. Suresh
Music: Sean Roldan
Language: Tamil
Runtime: 2H 14Mins
Release Date:

இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ரகு தாத்தா. ஹிந்தி திணிப்பை எதிர்த்து இப்படம் உருவாகியுள்ளது என படத்தின் ட்ரைலர் வெளியான போதே தெரிந்தது. இதன் காரணமாக இப்படத்தின் மேல் ஒரு எதிர் பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

இப்படம் 1960-ம் ஆண்டுகளில் நடக்கும் கதை. வள்ளுவன்பேட்டை என்ற ஊரில் உள்ள வங்கி ஒன்றில் பணி புரிபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு தமிழ் மீது அதிமிகுந்த காதல் இதனாலே ஹிந்தி திணிப்பு கூடாது என்று அவரின் தாத்தா எம்.எஸ்.பாஸ்கருடன் சேர்ந்து போராடியவர். பெண், பெண் உரிமை என பேசி தான் வாழ நினைக்கும் வாழ்க்கையை தன் விருப்படி வாழ நினைக்கும் ஒரு பெண் கீர்த்தி சுரேஷ். ஒரு திடீரென கீர்த்தி சுரேஷ் தாத்தா எம்.எஸ்.பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துமனையில் மருத்துவர்கள் உங்கள் தாத்தா மிக விரைவில் இறந்து விடுவார் என சொல்கிறார்கள். திருமணவே செய்ய மாட்டேன் என இருந்த கீர்த்தி சுரேஷ் இதனால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

கீர்த்தி சுரேசுடன் பழகி வரும் ரவீந்திர விஜய் என்பவரை திருமணம் செய்யவும் முடிவும் ஆகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் தான் திருமணம் செய்யவிருக்கும் ரவீந்திர விஜய் ஆணாதிக்கம் கொண்டவர் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார் கீர்த்தி சுரேஷ் இதன் பின்னர் திருமணத்தை நிறுத்தி விட்டு ஹிந்தி தேர்வு எழுதி வங்கியில் உயர் பதவி பெற்றுவிடு வேறு ஒரு ஊருக்கு செல்லவும் திட்டமிடுகிறார். கீர்த்தி சுரேஷ் நினைத்த இது நடந்ததா இல்லையா என்பதுதான் ரகு தாத்தா படத்தின் மீதிக்கதை.

நம் தமிழ் சினிமாவில் நடிகைகளை முதன்மை கதாப்பாத்திரமாக வைத்து நடிக்க சில நடிகைகள் மட்டுமே இருக்கிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். பெண்ணுரிமை பேசி தனக்கு விருப்பமானதை மட்டுமே செய்யும் குணம் கொண்ட ஒரு கதாப்பாத்திரம். தான் திருமணம் செய்ய போகும் நபர் பற்றிய உண்மை தெரிய வந்ததும் அந்த திருமணத்தை நிறுத்த கீர்த்தி சுரேஷ் செய்யும் வேலைகள் எல்லாம் நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.

படத்தின் நாயகனான ரவீந்திர விஜய். ஊருக்கே மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பது அவரின் கனவு ஆனால் அதை படத்தின் ஒரு நிமிடம் மட்டுமே நமக்கு காட்டி விட்டு பின்னர் நாயகி கீர்த்தி சுரேஷ் பின்னால் அலைந்து திரிகிறார். கொஞ்சம் வில்லத்தனம் கலந்த நடிப்பு அதை மிகச்சரியாக நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் பணி புரியும் தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயக்குமார், வங்கியில் தமிழை கொலை செய்வது போல பேசும் பியூன் என்று படத்தின் முக்கியமான கதாப்பாத்திரங்கள்.

படத்தின் மைனஸ் என்றால் இந்த படத்தை ஒரு சீரியான படமாக எடுத்திருக்க வேண்டும் இல்லையே முழு நகைச்சுவை படமாக எடுத்திருக்க வேண்டும் இல்லை என்றால் நமக்கு ட்ரெய்லரில் காட்டியது போல ஹிந்தி மொழியை எதிர்ப்பது போன்றாவது எடுத்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்திருப்பது படத்தின் மிகப்பெரிய மைனஸ் என தோன்றுகிறது.

Rating [3/5]

 

Trending

Exit mobile version