Connect with us
 

News

பாலா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் !

Published

on

மிக குறுகிய காலத்தில் தன் சிறந்த நடிப்பால் தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்தில் இவரின் சிறந்த நடிப்பின் மூலம் தேசிய விருதையும் பெற்றார். இதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சர்காடு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யா தயாரிப்பில் இயக்குநர் பால இயக்கவுள்ள புதிய படத்தில் அதர்வா நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.