News

மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் கீர்த்தி சுரேஷ் !

Published

on

விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை பொங்கள் பண்டிகையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆனால் கொரோனாவால் திட்டமிட்டபடி பட வேலைகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்துக்கு பின்னர் விஜய் நடிக்கவுள்ள 66-வது படத்துக்கான தயாரிப்பு முந்தைய பணிகள் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த படத்தை தெலுங்கு பிரபல இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். தற்போது இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் நடைபெற்று வருகிறது.

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக பைரவா, சர்கார் ஆகிய படங்களில் விஜயுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் மூன்றாவது முறையாக இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது அதனால் தமிழில் பிரபலமான நடிகையை கதாநாயகியாக தேர்வு செய்ய வேண்டும் அதே சமயம் தெலுங்கிலும் அவர் நன்றாக அனைவரும் அறிந்த முகமாக இருக்க வேண்டும் என்பதால் கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version