Connect with us
 

News

மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் ?

Published

on

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி தற்போது நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜ ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது.கொரோனா இரண்டாம் அலை குறைந்த பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை பிரபல இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்கவுள்ளதாகவும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளதாம் என்று தகவல் பரவி வருகிறது.

இயக்குனர் வம்சி கார்த்தி மற்றும் நாகர்ஜூனா நடித்த தோழா திரைப்படத்தை இயக்கியவர். தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர் இவர் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடிப்பில் வெளியான எவடு, ஜீனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான பிருந்தாவனம், பாகுபலி பிரபாஸ் நடித்த முன்னா ஆகிய பல வெற்றி படங்களை இயக்கியவர்.

வம்சி தளபதியை இயக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது.அதில் ஒரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் இதற்கு முன்னதாக விஜய்யுடன் பைரவா மற்றும் சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.