Connect with us
 

News

கேரள போலீஸ் வெளியிட்ட விஜய்யின் போக்கிரி பட காட்சிகள் !

Published

on

பொதுமக்கள் அவசர உதவி தேவைகளுக்கு அழக்க தனித்தனி உதவி எண்கள் இருப்பதை மாற்றிய மத்திய அரசு நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு தீயணைப்பு, போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் அழைக்க 112 என்ற ஒரே அவசர என் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டம் பல மாநிலங்களில் படிப்படியாக அறிமுககப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கேரள அரசும் இணைந்துள்ளது. தற்போது 112 அவசர எண்ணை விளம்பரம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கேரள போலீசார் அதற்கு விஜய்யின் போக்கிரி பட காட்சியை பயன்படுத்தியுள்ளனர்.

அந்த வீடியோவில் அசினை ரவுடிகள் சூழ்ந்து பிரச்சினை செய்கிறார்கள் அபோது அவரது தம்பி செல்போனில் 112 என்ற எண்ணை டயல் செய்வது போன்றும் அடுத்த சில நொடிகளில் போலீஸ் சீருடையில் விஜய் அங்கு வந்து நிற்பது போன்றும் வீடியோவை கேரள போலீசின் அதிகாரபூர்வ டுவிட்டதி வெளியிட்டுள்ளனர்.

எவரேனும் பிரச்சினையில் சிக்கிக்கொண்டால் 112 எண்ணை டயல் செய்யுங்கள் நாங்கள் உங்களுக்காக வந்து நிற்போம் என்று பதிவையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவுக்கு கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.