Connect with us
 

News

வசூலிலும் மாஸ் காட்டி வரும் கே.ஜி.எப் : சாப்டர் 2 !

Published

on

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’, இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்ததால் இந்திய அளவில் ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் இந்தியாவில் முதல் நாள் ரூ.134.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் நாள் வசூலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படம் இந்தியா முழுவதும் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.