News
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி !

பாலிவுட் பல உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
கியாரா அத்வானிதான் முதலில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தார் கால்ஷீட் பிரச்சனையால் அப்படத்திலிருந்து விலகினார்.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 22-வது படத்தில் ஜோடியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். அப்படி இவர் நடிக்கும் பட்சத்தில் கியாரா அத்வானி தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.
சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்துராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடிக்க உலக நாயகன் கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை முடித்த பின்னர்தான் சிவகார்த்திகேயன் 22-வது படத்தில் நடிப்பார்.