News
சமந்தாவை அடுத்து நயன்தாராவுக்கு வில்லனாகும் கிச்சா சுதீப் !

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ரஜினியுடன் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவிருக்கிறார். அந்த படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் கிச்சா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.