Connect with us
 

Reviews

கிங்ஸ்டன் – திரைவிமர்சனம் !

Published

on

Cast: G V Prakash Kumar, Dhivyabharath Others
Production: Zee Studios & Parallel Universe Pictures
Director: Kamal Prakash
Cinematography: Gokul Benoy
Editing: San Lokesh
Music: G V Prakash Kumar
Language: Tamil
Runtime: 2h 20Mins
Release Date: 7 March 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் என்ற மீன்பிடி கிராமம் தான் படத்தின் கதைக்களம். மீன்பிடிப்பதும் கடல் அட்டை எடுப்பதும் தான் இவர்களின் தொழிலாக இருந்து வரும் நிலையில், 1980களில் அக்கிராமத்திற்கு ஒரு சாபம் வந்து விழுகிறது. மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அடுத்துடுத்து மர்மமான முறையில் இறந்து கொண்டே இருக்கின்றனர். தொடர்ச்சியாக மீனவர்களும் இளைஞிகளும் முகத்தில் அடிபட்டு அவர்களின் பிணம் கடற்கரையில் ஒதுங்குவதை கண்டு மக்கள் அச்சமடைகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இனி தூவத்தூர் பகுதி யாரும் மீன்பிடிக்கவோ கடலில் இறங்கு அனுமதி மறுக்கப்படுகிறது என அரசாங்கத்தால் அப்பகுதி தடை செய்யப்படுகிறது.

தங்களது வாழ்வாதாரமே சிதைந்துவிட்டதாக எண்ணி தூவத்தூர் மக்கள் இருக்கும் நிலையில், அங்கு இருக்கும் பலருக்கும் வேலை வாய்ப்பையும் பணத்தையும் கொடுத்து அவ்வப்போது அவர்களின் பசியை ஆற்றி வருகிறார் தாமஸ்.தூவத்தூர் பகுதியைச் சேர்ந்த கிங்க்ஸ்டனும்(ஜிவி பிரகாஷ்) தாமஸிடம் வேலை பார்த்து வருகிறார். தூத்துக்குடியில் கடல் அட்டையை வேறு நாட்டைச் சேர்ந்தவருக்கு கடத்தும் தொழிலை செய்து வருகிறார் தாமஸ். தாமஸுக்காக இந்த வேலையை தனது நண்பர்களோடு செய்து கொடுப்பவர் தான் கிங்க்ஸ்டன்.

மேலும் தன்னுடன் கடல் அட்டை கடத்தல் தொழிலுக்கு வந்த சிறுவனை கடற்படை எல்லை வீரர்களால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் ஜிவி பிரகாஷ்.தாங்கள் கொண்டு வந்த கடல் அட்டை பெட்டியை திறந்து பார்த்து அதில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். தாமஸிடம் சென்று தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் ஜி வி பிரகாஷ்.
தாமஸை எதிர்க்க ஆரம்பிக்கிறார் ஜி வி பிரகாஷ். தனது தூவத்தூர் கிராம மக்கள் மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலை ஆரம்பிக்க வேண்டுமென்றால் தான் முதலில் படகை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி தனது நண்பர்களுடன் படகை எடுத்துக் கொண்டு கடலுக்குள் செல்கிறார் ஜிவி பிரகாஷ்.

கடலுக்குள் செல்லும் இவர்களை அமானுஷ்யங்கள் சூழ்ந்து கொள்கின்றன. சென்றவர்கள் திரும்பி வந்தார்களா.? கிராம மக்களிடையே நம்பிக்கையை விதைத்தாரா ஜிவி பிரகாஷ்.?? அந்த அமானுஷ்யம் யார் என்பதை ஜி வி பிரகாஷ் கண்டறிந்தாரா இல்லையா என்பதுதான் மீதி கதை.

படம் எப்படி கதை

நடிகர் ஜிவி பிரகாஷ் வழக்கம்போல் தனது மிக சிறப்பு நடிப்பை இப்படத்திலும் கொடுத்து அசத்தியிருக்கிறார்.மேலும் அந்த நடிப்பு திரைக்கதையின் வேகம் அதை பெரிதான ஒரு குறையாக சொல்ல முடியவில்லை.

இதை தொடர்ந்து நாயகி திவ்ய பாரதியின் கதாபாத்திரமென்பது படத்தில் பெரிதான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வழக்கமாக வந்து செல்லும் கதாபாத்திரமே திவ்ய பாரதிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.இதையொட்டி ஜி வி பிரகாஷின் நண்பர்களாக நடித்த அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள் .

மேலும் தாமஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த சாபுமோன் தனது கதாபாத்திரத்தை சரியான மீட்டரில் நடித்து மிரட்டியிருக்கிறார். சேத்தன் மற்றும் அழகம் பெருமாள் இருவரும் தங்களது அனுபவ நடிப்பை அளவாக கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பென்பது இப்படத்தில் அலப்பறியது. அதை திறம்பட கையாண்டிருக்கிறார்கள் அனைவரும். தமிழ் சினிமாவில் இது ஒரு புதுமுயற்சியாக பார்க்கலாம்.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு வெளிச்சத்தை சரியாக கொடுத்திருக்கிறது. ஜி வி பிரகாஷின் பின்னணி இசையும் மிரட்டல் என்பது குறிபிடாதக்கது.

கதையின் முதல் பாதி ரொம்ப மெதுவாக சென்றாலும். படத்தின் 2 ஆம் பாதி மற்றும் சிலமிக்ஸ் காட்சி நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்து பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

பிளஸ்
ஜி வி பிரகாஷ் மற்றும் அவர்கள் நண்பர்களின் நடிப்பு, திரைக்கதை , ஒளிபதிவு மற்றும் பாடல்

மைனஸ்
கதையின் முதல் பாதி ரொம்ப மெதுவாக இருக்கிறது மற்றும் இக்கதையில் வரும் தேவைஇல்லாத நிறைய கதாபாத்திரங்கள்.

மொத்தத்தில்

கிங்ஸ்டன் – இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பு முதல் பாதியில் இருந்திருந்தால் கிங்ஸ்டன் சிறப்பாக இருந்திருப்பான்.

Rating – 2.5/5