News

தலைவி படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு !

Published

on

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்.

கொரோனா இரண்டாம் அலைக்கு முன்னரே இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டது இதனால் படத்தின் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டது. பல ஓடிடி தளங்கள் இப்படத்தை கேட்டாலும் வெளியிட்டால் திரையரங்குகளில் மட்டும்தான் வெளியிடுவோம் என்று விடாப்பிடியாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தலைவி திரைப்படம் செப்டம் 10-ம் தேதி நாடுமுழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படம் என்ற காரணத்தால் கண்டிப்பாக அதிமுக கட்சியிடம் இருந்து மிகுந்த நல்ல வரவேற்பு கிடைக்கும். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, மதுபாலா ஆகியோர் படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Trending

Exit mobile version