News
வலிமை இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்ற அஜித் !

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. அஜித்துக்கு ஜோடியா பாலிவுட் நடிகையான ஹூமா குரேசி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் வலிமை படமு ஒன்றாகும்.
கடந்த மாதமே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக சாதனை புரிந்தது. தற்போது இப்படத்தின் இறுதிக்காட்சி மட்டுமே படமாக்கவேண்டும் ஆனால் அந்த காட்சி வெளி நாட்டில் படமாக்கவேண்டும் தற்போது உள்ள கொரோனா பரவல் காரணமாக அதில் தடை ஏற்பட்டு வந்தது.
தற்போது வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் குறிப்பிட்ட அந்த சண்டைக்காட்சியை ரஷ்யாவில் படமாக்க தீர்மானித்துள்ளார்கள் படக்குழு. இதற்காக படக்குழுவும் அஜித் அவர்களும் ரஷ்யா புறப்பட்டு சென்றனர். படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் முன்னதாகவே ரஷ்யா புறப்பட்டு சென்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சண்டைக்காட்சியுடன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது. வலிமை படத்தின் தீபாவளி திருநாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.