Connect with us
 

News

சிறந்த நடிகருக்கான விருதுக்கு சூர்யா தேர்வு !

Published

on

பெண் இயக்குநர் அற்புதமான இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஏர். டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை கதையை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விரு விழாவில் சூர்யாவின் சூரரைபோற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விரூதுக்காக சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த படமாகவும் இப்படம் தேர்வு செய்யப்படுள்ளது. இந்த செய்தியினை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இதே விருது வழங்கும் விழாவில் நடிகை சமந்தா தி மேமிலி மேன் வெப்தொடருக்காக சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.