News

ஹீரோக்களை சுற்றி வரும் நடிப்பை விரும்பவில்லை – வாணி போஜன் !

Published

on

டி.வி தொலைக்காட்சி தொடரிலிருந்து சினிமாவுக்கு வந்து மிகவும் பிரபலமான நடிகைகளில் வரிசையில் வாணி போஜனும் ஒருவர். தற்போது இவர் கைவசம் 7 படங்களை வைத்துள்ளார் இவை அனைத்தும் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகவுள்ளது.

இந்த நிலையில் வாணிபோஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது:- கொரோனா அனைத்து துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் நடிக்கும் சில படங்களில் படபிடிப்புகளும் இதனால் தாமதமாகியுள்ளது. தற்போது நான் ஒப்பந்தம் செய்து கொண்ட படங்களில் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்துவிட்டது அது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது.

தற்போது பரத்துடன் ஒரு திகில் படத்தில் நடிக்கிறேன் இது நல்ல கதையமைம்சம் கொண்ட திரைப்படம். சசிகுமார், விக்ரம்பிரபுவுடன் நடிக்கும் படங்களில் நடித்து முடித்து விட்டேன். நடிகர் விதார்த்துடன் நடித்த படத்தின் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்.

தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் ஹீரோக்களை சுற்றி வரும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு இஷ்டம் இல்லை. நடிகரை போன்று நல்ல சவாலான வேடங்களில் ஏற்று நடிக்கவே நான் விரும்பிறேன் என்றும் கூறினார்.

Trending

Exit mobile version