News

கே.ஜி.எப் 2 படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

2018-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள இப்படத்தில் ஶ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்துள்ளார். இவர்களும் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், அதீரா, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. கடந்த ஓராண்டாக இப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அணைத்தும் மூடப்பட்டத்தால் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை அறிவிக்காமல் இருந்தது படக்குழு.

இந்நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக தற்போது குறைந்து வருவதால் திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளது. இதனால் தற்போது கே.ஜி.எப் 2 படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு அதன்படி அடுத்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரவபூர்வமாக அறிவித்தது படக்குழு.

Trending

Exit mobile version