News
விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஷிவாணி நாராயணன் !

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் சீசன் 4 நிகச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷிவாணி நாராயணன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்சேதுபதிக்கு சமந்தா, நயன்தாரா என பல முன்னணி நடிகைகள் நடித்து வரும் இந்த நிலையில் ஷிவாணி ஜோடியாகிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.டீவி தொடர்களில் மட்டுமே நடித்திருக்கும் ஷிவாணிக்கு இதுவே முதல் படமாகும் முதல் படத்திலேயே விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.
இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.