News

வலிமை படத்தின் வில்லன் நடிகருக்கு நிச்சயதார்த்தம் !

Published

on

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை இப்படத்தில் வில்லனாக நடித்து வருபவர் கார்த்திகேயா. தெலுங்குல் வெளியான கேங்க் லீடர், ஆர்.எக்ஸ், 100 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

இந்நிலையில் கார்த்திகேயாவும், லோகிதா என்பவரும் கடந்த 11 வருடமாக காதலித்து வந்தனர். தற்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து கார்த்திகேயா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் எனது தோழி இப்போது துணையாக மாறுகிறார். எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதை மகிழ்ச்சியோடு உங்களுக்கு அறிவிக்கிறேன்.

2010-ம் ஆண்டு முதல் பல தடவையாக லோகிதாவை சந்தித்தேன். இன்னும் பல ஆண்டுகள் நாங்கள் இணைந்து இருப்போம் என்று கூறியுள்ளார்.

கார்த்திகேயாவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதல் முதலாக காதலியை சந்தித்தபோது எடுத்த படத்தையும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்த படத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Trending

Exit mobile version