Connect with us
 

News

விஷால் மீது வழக்கு தொடுத்த லைகா நிறுவனத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம் !

Published

on

நடிகர் விஷால் மீது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. அதாவது கடந்த 2016-ம் ஆண்டு மருது படத்தின் தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21.29 கோடி ரூபாயை நடிகர் விஷால் கடனாக பெற்றார். அந்த கடனை திரும்ப்பிச் செலுத்த முடியாதததால் லைகா நிறுவனத்தை அனுகிய விஷால் தான் அன்புச்செழியனிடம் பெற்ற கடனை அடைக்குமாறு விஷால் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற லைகா நிறுவனம் அந்த கடனை அடைத்தது.

இதற்கு பதிலாக 2019 ஆண்டில் லைகா நிறுவனத்துக்கு விஷால் ஒரு படம் நடித்து தருவதாக ஒப்பந்தம் ஒன்றை போட்டுக்கொண்டனர். இதன்படி லைகா நிறுவனத்துக்கு ரூ.21.29 கோடி மற்றும் 30 சதவீத வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி விஷால் நடித்த துப்பறிவாளன் படம் வெளியான பின்னர் 2020 மார்ச்சில் ரூ.7 கோடி கொடுத்து விட்டு மீதமுள்ள தொகையை 2020 டிசம்பர் மாதம் கொடுப்பதாக லைகா நிறுவனத்துக்கு தருவதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் விஷால் அதை கொடுக்கவில்லை இதனால் விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் எந்த பதிலும் சொல்லவில்லையாம். இதனால் மீதமுள்ள 30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாயை வழங்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன் துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் நேரத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டுக்கு முன் வழக்கு தொடர்ந்தது பொருந்தாது எனவே லைகாவின் மனுவை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.