News

முதல் முறையாக வில்லி வேடத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் !

Published

on

கதாநாயகர்கள் வில்லன்களான நடிக்கின்றனர். விஜய்சேதுபதி பேட்ட, விக்ரம் வேதா, மாஸ்டர், படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அர்ஜூன், கார்த்திக், அரவிந்தசாமி ஆகியோரும் வில்லனாக நடித்துள்ளனர். இன்று முன்னணி நடிகராக இருக்கும் பலர் தளபதி விஜய், தல அஜித் ஆகியோரும் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகிகளும் வில்லி வேடங்களில் நடிக்க தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகை ஜோதிகா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வில்லி வேடம் ஏற்றார். சிம்ரன் ஐந்தாம்படை மற்றும் சீமராஜா படங்களில் வில்லியாக நடித்தார் தற்போது பிரசாந்தின் அந்தகன் படத்திலும் வில்லி வேடத்தில் நடித்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், மனிஷா கொய்ரலா ஆகியோரும் வில்லியாக நடித்துள்ளனர். நயன்தாரா கோலமாவு கோகிலா படத்தில் ஒரு விதமான வில்லத்தனம் ஏற்று நடித்தார்.

அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பதமாகியுள்ளார். இந்த படத்தில் நாகார்ஜூனாவுக்கு வில்லியாக நடிக்கவிருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்னர் அதிக படங்களில் நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் சிரஞ்சீவியுடன் ஆர்ச்சார்யாத் தமிழில் ஹேய் சினாமிகா, கருங்காப்பியம் இந்தியில் உமா ஆகிய படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

Trending

Exit mobile version