News

பார்த்திபன் – கெளதம் கார்த்திக் மோதும் யுத்த சத்தம் !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கியவர் எழில் அதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பட திரைப்படங்களை இயக்கியவர். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் கெளதம் கார்த்திக் நடித்து வருகின்றனர்.

ஆகஷன் அதிரடி படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

இப்படத்திற்கு யுத்தம் சத்தம் என்று டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இப்படத்தில் நடிகையாக சாய்பிரியா நடித்து வருகிறார். காமெடி நடிகர் ரோபோ சங்கர் இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version