Connect with us
 

News

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் விஜய் !

Published

on

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை போல இல்லையே என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் இந்த படத்துக்கு இதுதான் சரியான தலைப்பு என்கிறது படக்குழு.

இந்தநிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்துள்ளது. விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் விஜய்க்கு சம்பளமாக ரூ.120 கோடி என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற பெருமை விஜய் பெறுகிறார்.