Connect with us
 

Reviews

கொன்றால் பாவம் – விமர்சனம் !

Published

on

Movie Details

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரல்ட்சுமி சரத்குமார், சார்லி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கொன்றால் பாவம். கன்னட மொழியில் இப்படம் ஏற்கனவே வெளியாகி அங்கி தேசிய விருதையும் வென்றுள்ளது. அது மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ளது. மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சிறப்பு காட்சி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதைக்களமே 1985-ம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது. சார்லி மனைவி ஈஸ்வரி ராவ் இவர்களின் மகள் வரலட்சுமி சரத்குமார். மிகவும் வறுமையான குடும்பம் இதன் காரணமாக வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வருகிறது. இதை தவிர இவர்களுக்கு கடன் தொல்லை வேறு மேலும் இவர்களை வறுமையில் வாட்டுகிறது. இப்படி இருக்க வழிப்போக்கனாக போகும் சந்தோஷ் பிரதாப் ஒரு நாள் இவர்கள் வீட்டில் தங்குகிறார். இதை பயன்படுத்திக்கொண்ட வரலட்சுமி சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்து விட்டு அவரிடம் உள்ள பணம், நகை அனைத்தையும் கொள்ளையடிக்க சந்தோஷமாக வாழ நினைக்கிறார். இறுதியில் வரலட்சுமி நினைத்தது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் கதாப்பாத்திர தேர்வு அந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பங்களிப்புதான். அதை தவிர படத்தில் பெரிதாக பாடல்கள் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்சமான கதைக்கு பாடல்கள் எல்லாம் ஒரு மிகப்பெரிய வேகத்தடை. படத்தின் முழுக்கதையும் ஒரு பழைய வீட்டை சுற்றியே நிகழ்கிறது.

வரலட்சுமி சரத்குமார் தந்தையாக வரும் சார்லி மிகப்பெரிய முறட்டு குடிகாரன். தன் அனுபவ நடிப்பால் நடித்து அசத்தியுள்ளார். மனைவியாக வரும் ஈஸ்வரி ராவ் இப்படத்தில் இவருக்கு ஒரு நல்ல கதாப்பாத்திரம் அதை உணர்ந்து தனது முழு உழைப்பையும் இந்த கதாப்பாத்திரத்திற்கு கொடுத்து உயிர் கொடுக்கிறார்.

வில்லியாக மிரட்டும் வரலட்சுமி இப்படத்தில் ஒரு கிராமத்து இளம் பெண்ணாக நடித்துள்ளார். பார்ப்பதற்கு அப்படியே ஒரு கிராமத்து பெண்ணாக கண் முன் வருகிறார். வரலட்சுமி சினிமா பயணத்தில் இப்படம் கண்டிப்பாக ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப் ஒரு மிடுக்கான இளைஞனாக அசத்தியுள்ளார். படத்தின் பல இடங்களில் இவரின் அபார நடிப்பின் மூலம் நம்மிடம் கைதட்டல்களையும் பெற்று விடுகிறார். இவரின் உடல் அமைப்பு நடிப்பி என இந்த கதாப்பாத்திரத்தை இவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது போல என நினைக்க வைக்கிறார்.

இயக்குநர் தங்கதுரை, மனோபாலா, சென்றாயன், மூவரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நம் மனதில் பதியும்படியான கதாப்பாத்திரம்.

படம் ஆரம்பிக்கும் போது ஆமை வேகத்தில்தான் நகர்கிறது நேரம் செல்ல செல்ல அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தை நமக்குள் கொண்டுவருகிறார் இயக்குனர். மனிதனுக்கு ஆசை என்ற ஒன்று இருக்கலாம் அதுவே பேராசையாக மாறி விட்டால் அதற்காக இந்த மனித இனம் என்ன எல்லாம் செய்கிறது அதன் விளைவு என்ன என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் தயால் பத்மநாதன்.

படத்தில் வரும் முத்தான வசனங்கள் நம்மை வியக்க வைக்கிறது. அதுவும் குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அருமை அற்புதம். வழக்கம் போல சாம் சிஎஸ் தன் பின்னணி இசையால் மிரட்டியுள்ளார்.மொத்தத்தில் கொன்றால் பாவம் அதை தின்றாலும் பாவம்.

அதாவது ஒரு மனிதனுக்கு ஆசை இருந்தால் என்ன செய்வான் அதே ஆசை அவனுக்கு பேராசையாக மாறிவிட்டால் அதை நிறைவேற்ற அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை த்ரில்லர் திரைக்கதையுடன் நமக்கு சொல்லியிருக்கிறார்.
Kondraal Paavam Review By CineTime

[wp-review id=”45659″]