Reviews

Koorman – Movie Review !

Published

on

கூ ர்மன் இந்த திரைப்படம் ஒரு ‘மைன்ட் ரீடர்’ திரைப்படம் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழு அறிவித்திருந்தது. அதாவது ஒருவர் மனதில் நினைக்கும் அனைத்தையும் அப்படியே சொல்பவர்தான் ‘மைன்ட் ரீடர்’

Movie Details

படத்தின் நாயகனான ராஜாஜி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார். இவர் காதலி ஜனனியையும் காதலியின் முறை பையனையும் கொலை செய்ய முயன்ற போது தலையில் அடிபட்டதால் ராஜாஜி மனதளவில் பாதித்து போக இவரை ஒரே அடியாக வேலையை விட்டு நீக்கி விடுகிறார்கள்.

காதலியை இழந்த சோகத்திலும் வேலையை இழந்த சோகத்திலும் செங்கல்பட்டிலுள்ள தனது பண்ணை வீட்டில் வேலைக்காரர் பாலசரவணன் செல்ல பிராணியான நாய் சுப்புவுடன் வசித்து வருகிறார்.

தவறு செய்து விட்டு போலீஸ் அதிகாரிகளிடம் வாயே திறக்காமல் இருக்கும் குற்றவாளிகளை ராஜாஜிவின் பண்ணை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் புலனாய்வு அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன். காரணம் அடுத்தவர் மனதில் நினைக்கும் அனைத்தையும் சொல்லும் திறமை கொண்டவர் ராஜாஜி.

அப்படி ஒரு நாள் ஒருவனை ராஜாஜிவின் பண்ணை வீட்டிற்கு அனுப்பி வைக்க அந்த கைதியோ அங்கிருந்து தப்பித்து விடுகிறார்ன். இதனால் ஆடுகளம் நரேனுக்கும், ராஜாஜிக்கும் மிகப்பெரிய பிரச்சினை வருகிறது அதன் பின்னர் அவனை கண்டு பிடித்து அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக வரும் ராஜாஜி சற்று விசித்திர குணம் கொண்டவராக நினைத்த நேரம் தூங்குவார், சாப்பிடுவார், மனதளவில் பாதிக்கப்பட்டாலும் தன்னிடம் அனுப்பட்டும் குற்றவாளிகளை பேச வைத்து அவர்களிடம் உண்மைகளை வாங்குவதில் வல்லவர்.

வித்தியாசமான ஒரு சைக்கலாஜி திரில்லர் திரைப்படம் கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் அதை அழுத்தமாக பதிவு செய்யாமல் விட்டிருக்கிறார்.
Cinetimee

இப்படி நடுத்தர வயதுக் கதாப்பாத்திரத்தில் நேர்கொண்ட பார்வை மறைந்த என சிறப்பான நடிப்பு. அதிலும் காதலி ஜனனி எப்போதும் தன்னுடன் இருப்பது போல நினைத்து அவர் ஏற்றுக்கொண்ட கதாப்பாதிரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

நாயகியாக வரும் ஜனனிக்கு படத்தில் பெரிதாக வாய்ப்பில்லை கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் காதலன் ராஜாஜிக்கு அட்வைஸ் சொல்லிவிட்டு செல்கிறார்.

ராஜாஜிக்கு கூடவே இருந்து அவரை கவனித்து கொள்ளும் வேலைக்காரனாக பாலசரவணன். இவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் அப்பு என்கிற செல்லப்பிராணி நாயும் சிறப்பாக நடித்துள்ளது. சோகமான செய்தி தற்போது அந்த நாய் உயிரோடு இல்லை என்பதுதான்.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது படத்தின் இடம் குறிப்பாக ராஜாஜின் பண்ணை வீடு அதை சுற்றி உள்ள இடங்களும். இதற்கு பக்கபலமாக ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த் காமிரா மிரட்டல்.கோபி கருணாநிதியின் அரங்க அமைப்பு நம்மை மிரள வைக்கிறது.

பெண் வன்கொடுமையை மையப்படுத்தி ஒரு சைக்கலாஜி திரில்லர் படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர். ஆனால் அதை அழுத்தமாக பதிவு செய்யாமல் விட்டதே படத்தின் மாபெரும் வெற்றியை தடுத்து விட்டது.


மொத்தத்தில் கூர்மன் கூர்மை குறைவாக உள்ளது.

Trending

Exit mobile version