News

ஹாலிவுட் பாணியில் உருவாகியுள்ள கொற்றவை திரைப்படம் !

Published

on

ஒரு தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியவர் சி.வி.குமார். தற்போது இவர் இயக்கி தயாரிக்கும் திரைப்படம் கொற்றவை. இப்படத்தில் புதுமுகங்கள் ராஜேஷ் கனகசமை, சந்த்ரா, சுபிஷா, அனுபமாக குமார், வேல ராமமூர்த்தி என பலர் நடிக்க இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படம் பற்றி சி.வி.குமார் கூறியதாவது:- டைட்டிலை பார்த்து விட்டு பலரும் இதனை ஒரு பக்தி படம் என்ற்று நினைத்துவிட்டார்கள். கண்டிப்பாக இது ஒரு பக்தி படம் அல்ல. தமிழர்களின் குழ தெய்வ வழிபாடானா கொற்றவையை சுற்றி நடக்கிற ஒரு புதையல் தேடும் வேட்டை இந்தப்படம். ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ், டிரஸ்டர் ஹண்டர் பாணியில் உருவாகும் படம்.

ஒரு புதையலை தேடி ஒரு குழு செல்கிறார்கள். போகும் அவர்களுக்கும் அந்த புதையலுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது இதுதான் இப்படத்தின் மையக்கருத்து. இதை வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க பொழுது போக்கு படமாக உருவாகி வருகிறது.

இப்படம் மூன்று பாகமாக வெளிவரவிருக்கிறது. இதன் முதல் பாகம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு 3-வது பாகத்தின் படப்பிடிப்புகள் நடக்கவிருக்கிறது. இப்படத்தில் அதிகமான கம்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. இதற்கான பணிகள் தனியாக நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Trending

Exit mobile version