News
பாலா இயக்கத்தில் தமிழுக்கு வரும் கிரித்தி ஷெட்டி !

மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் இருந்து ஏற்கனவே பல கதாநாயகிகள் தமிழ் படங்களில் நடிக்க வந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டியும் தமிழுக்கு வருகிறார்.
இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று கடந்த வாரமே தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
இப்படம் மூலம் தமிழில் கதா நாயகியாக அறிமுகமாகிறார் கிரித்தி ஷெட்டி. தெலுங்கில் வெளியான உப்பென்னா, நாகர்ஜூனாவுடன் பங்கர் ராஜூ, நானியுடன் ஷியாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் லிங்குசாமி இயக்கி வரும் தி வாரியர் என்ற படத்தில் ராம் பொத்தினேவுடன் நடித்தும் வருகிறார்.