Connect with us
 

News

பாலா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி !

Published

on

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத் திறனாளியாக வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

படப்பிடிப்புக்காக மதுரை அருகே பெரிய அரங்கு அமைத்து உள்ளனர் படக்குழு. இதில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

படத்தின் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் பெயர் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இவரின் அறிமுக தமிழ் திரைப்படம்.

கிரித்தி ஷெட்டி தெலுங்கில் வெளியான உப்பென்னா, பங்கர் ராஜூ, ஷியாம் சிங்கரா ராய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வாரியர் என்ற புதிய படத்தில் தற்போது நடித்தும் வருகிறார்.