Reviews

குதிரைவால் – விமர்சனம்

Published

on

னோஜ் லயனல் ஜேசன், ஷ்யாம் சுந்தர் இயக்கத்தில் ராஜேஷ் அவர்களின் கதை, திரைக்கதையில் கலையரசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் குதிரை வால். இதி போன்ற ஒரு கதையை திரையில் கொண்டு வருவது என்பது அவ்வளவு சாதரமாண விஷயமல்ல.

Movie Details

  • Cast: Kalaiyarasan , Anjali Patil , Chetan , Anandsami ,
  • Production: Neelam Productions, Yaazhi Films
  • Director: Manoj Leonel Jahson, Shyam Sunder
  • Screenplay: G. Rajesh
  • Cinematography: Karthik Muthukumar
  • Editing: Gridaran MKP
  • Music: Pradeep Kumar
  • Language: Tamil
  • Censor: ‘U/A’
  • Runtime: 2 Hour 5 Mins
  • Release Date: 18 March 2022

வங்கியில் பணிபுரியும் கலையரசன் ஒரு நாள் தூங்கி எழுந்து பார்க்கும் போது அவருக்கு பின்னால் ஒரு குதிரை வால் முளைத்திருக்கிறது. என்ன ஆனது தனக்கு ஏன் இந்த குதிரை வால் வந்தது என்பது குறித்து கணவுகளுக்கு அர்த்தம் சொல்லும் ஒரு பாட்டி, கணக்கு மூலம் எதற்கும் தீர்வு உண்டு என்று சொல்லும் ஒரு கணித ஆசிரியர், ஜோசியம் பார்க்கும் ஒருவர் இவர்கள் மூவரிடமும் சென்று ஆலோசனை கேட்கிறார்.

தனக்கு கனவில் ஏதோ ஒன்று நடந்தது என்பதை பின்னர் உணர்ந்து கொள்ளும் கலையரசன் அதற்காக பதிலை தேடி தன் தேடல் பயணத்தை செய்கிறார். அவரின் அந்த தேடலுக்கும் சந்தேகங்களுக்கும் விடை கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஒரு நிலையான மனநிலை கொள்ளாத கலையரசன் இப்படிப்பட்ட ஒரு கதாப்பாத்திரத்தை திரையில் ரசிகர்களுக்கு காட்டுவதற்கு நிறையவே மெனக்கெடல் வேண்டும்.

அதை நிறைவாக பூர்த்தி செய்துள்ளார் கலையரசன். குதிரைவால் வந்தவுடன் காலை ஒரு விதமாக மடக்கு நடப்பது, எப்போதும் ஒரு வித யோசனையில் இருப்பது போன்ற முக பாவனை.

யாரும் எதிர் பார்க்காத நேரம் கோவப்படுவது என இந்த பூமியில இப்பிடியும் ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நமக்கு காட்டுகிறது.அதே போல கலையரசனின் சிறு வயது சிறுவனாக நடித்திருக்கும் அந்த பையன் அவனது கூட்டாளி சிறுமியும் கிராமத்து சிறு வயது நட்பை தூய்மையாக அழகாக காட்டியுள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக குதிரைவால் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர்.
Cinetimee

ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் ஒரு உணர்வு ரீதியான திரைப்படத்துக்கு காட்சிகள் மூலம் மட்டுமே ரசிகர்களை கவரமுடியும் என்று நன்றாக தெரிந்து அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.

அதே போல படத்தில் எது தேவையோ அதை வைத்து விட்டு தேவையற்ற காட்சிகள் அனைத்தையும் சரியாக நீக்கியுள்ளார் கிரிதரன்.பிரதீப்குமார் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. மார்ட்டென் விசர் என்பவர் பின்னணி இசை அமைத்திருக்கிறார் அதுவும் ஒர் அளவு ரசிக்கலாம்.

பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை படக்குழுவினர் கொடுத்திருக்கிறார்கள். கனவுக்கும் நனவுக்கும் இடையேயான பயணத்தை திரை சொல்லலில் எங்கேயும் சமரசம் இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.


மொத்தத்தில் குதிரைவால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவம்

Trending

Exit mobile version