Connect with us
 

Reviews

கனெக்ட் விமர்சனம் !

Published

on

Movie Details

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கனெக்ட்.

மருத்துவரான வினய் இவரின் மனைவி நயன்தாரா இவர்களுக்கு ஒரு மகள் அனியா நபீசா. நயன்தாராவின் அப்பாவாக சத்யராஜ். என மகிழ்ச்சியாக போகிறது இவர்களின் குடும்ப வாழ்க்கை. அப்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் அதை தடுக்க ஊரடங்கு போடுகிறது அரசாங்கம்.

மருத்துவமனையில் தங்கி அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளுத்து வரும் நயன்தாராவின் கணவர் வினய் கொரோனா நோய் தாக்கி இறந்து போக இந்த இறப்பால் இவர்களின் குடும்பவே நொறுங்கி போகிறது.

நயன்தாரா தன் மகள் அனியாவுடன் வீட்டில் இருக்கும்போது. மீடியேட்டர் உதவியுடன் அனியா தந்தை வினய் ஆவியுடன் பேச முயற்சி செய்கிறார். இறந்த தந்தையின் ஆர்மாவுடன் பேச முயலும் போது என்ன விபரீதம் நடந்தது என்ற திக் திக் நிமிடங்கள்தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக வரும் நயன்தாரா கணவரை இழந்த துக்கத்திலும் தன் மகளின் நிலையை பார்த்து பரிதவிக்கும் போதும் தன் தோழியிடம் மனம் விட்டு பேசும் இடங்களில் எல்லாம் யதார்த்தமான நடிப்பை படம் முழுவதும் கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட அந்த கதாப்பாத்திரத்துக்கு மகுடம் சூட்டியுள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பின் ராட்சசியாக விஸ்வரூபம் எடுக்கும் இடமெல்லாம் கைதட்டல்.

அப்பாவாக வரும் சத்யராஜ் தனது அனுபவ நடிப்பால் மேலும் உயர்ந்து நிற்கிறார். மகளுக்காவும், தன் பேத்திக்காவும் துடிக்கும் காட்சிகளில் படம் பார்க்கும் நம்மையும் அழ வைத்து விடுகிறார்.

மகளாக நடித்துள்ள அனியா நபீசா மிக சரியான ஒரு தேர்வு என்றுதான் கூற வேண்டும். நயன்தாரா கணவராக சிறிது நேரம் வந்தாலும் பாராட்டு பெறுகிறார். பாதிரியாராக வரும் அனுபம் கேர் கதையை முடித்து வைக்கும் மிகப்பெரிய பொறுப்பை சிறப்பாக செய்து வைக்கிறார்.

நயன்தாரா தோழிகளாக வரும் லிஸி, மீடியமாக வரும் மேகா ராஜன், தெரபிஸ்டாக வரும் பிரவீனா நண்டு உற்பட அனைவருமே தங்களின் கதாப்பாத்திரங்களை மிகவும் அருமையாக நடித்து படத்திற்கு பலம் கொடுத்துள்ளனர்.

ஓரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்தபடியே மக்கள் வாழ்க்கையை எப்படி சமாளித்தார்கள், எப்படி தவிப்போடு இருந்தார்கள் என்பதை திகில் கலந்து சொன்ன விதம் உண்மையாக இயக்குநர் அஸ்வின் சரவணன் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

ஊரடங்கு காலம் என்பதால் பெரும் பகுதி வீட்டின் உள்ளேயும் இருட்டிலும் எடுக்கப்ப்ட்டிருந்து என்றாலும் அது கொஞ்சம் நமக்கு ஒரு சலிப்பாகவே இருக்கிறது.

மணிக்ண்டன் கிருஷ்ணாமாச்சாரியின் ஒளிப்பதிவு, பிரித்வி சந்திரசேகர் அவர்களின் இசை என இருவரும் போட்டா போட்டி போடுகிறார்கள். ஒரு காட்சியில் ஒளிப்பதிவாளர் மிரட்டினால், அடுத்த காட்சியிலேயே பிண்ணனி இசையால் இவர் நம்மை மிரள வைக்கிறார்.

மொத்தத்தில் கனெக்ட் நல்ல சஸ்பென்ஸ் படத்துக்குரிய விறுவிறுப்போடு கதை நகர்கிறது கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்தான்.Connect Review By CineTime

[wp-review id=”44847″]