News
ராகவா லாரன்ஸுடன் புதிய கூட்டணி அமைக்கும் ஜெயம்ரவி பட இயக்குநர் !

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கியவர் லட்சுமண். அதை தொடர்ந்து போகன் மற்றும் பூமி படத்தையும் ஜெயம் ரவியை வைத்து இயக்கினார். தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து இயக்கிய இவர் கடைசியாக இவர்களின் கூட்டணியில் ஓடிடி தளத்தில் வெளியான பூமி திரைப்படம் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் லட்சுமண் அடுத்து இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவியை விட்டு விட்டு ராகவா ரான்ஸை வைத்து படம் எடுக்கவுள்ளாராம். இவர் சொன்ன கதை ராகவா லாரன்ஸுக்கு மிகவும் பிடித்து போய் அவருக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.