Teaser

லியோ அர்ஜூன் கதாப்பாத்திர மாஸ் வீடியோ வெளியானது !

Published

on

ஆகஷ்ன் கிங் அர்ஜூன் பிறந்த நாளான இன்று லியோ படத்தில் அவரின் கதாப்பாத்திம் ஹரால்டு தாஸ் கிளிம்ப்ஸ் வீடியோவை லியோ படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

வெறும் 40 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரில் வந்து மாஸாக இறங்கும் அர்ஜூன் விக்ரம் பட கிளைமாக்ஸ் காட்சி போல ரோலக்ஸ் வருவது போல அறிமுகமாகிறார் இந்த ஹரால்டு தாஸ்.

பல நூறு அடியாட்கள் சூழ்ந்து இருக்கும் இடத்தில் ஒருவனின் கையை அடித்து வெட்டி எறிவது போன்றும் பின்னர் சிகரெட்டை புகைத்தபடி முன் பக்கம் திரும்பி வழக்கமான அர்ஜூன் வசனமான ‘தெறிக்க’ என்று கூறுவது போன்று அந்த வீடியோவில் உள்ளது.

LEO - Glimpse of Harold Das | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander

 

 

Trending

Exit mobile version