Reviews

லியோ விமர்சனம் !

Published

on

Cast: Thalapathy Vijay, Sanjay Dutt, Trisha, Arjun, Gautham Vasudev Menon, Mysskin, Mansoor Ali Khan, Priya Anand
Production: Seven Screen Studio
Director: Lokesh Kanagaraj
Screenplay: Lokesh Kanagaraj
Cinematography: Manoj Paramahamsa
Editing: Philomin Raj 
Music: Anirudh Ravichander
Language: Tamil
Runtime: 2 Hrs 44 Mins
Release Date: 19/October/2023

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் லியோ.

ஹிமாச்சல் பிரதேசத்தில் தியோக் என்ற இடத்தில் மனைவி த்ரிஷா இரண்டு குழந்தைகளுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் இரவு விஜய் நடத்தும் காபி ஷாப்பிற்கு வரும் சிலர் விஜய் மகளை கொலை செய்ய போக அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்கிறார். இறந்த அனைவரும் மிகப்பெரிய குற்றவாளி என தெரிய வர விஜய்யை விடுதலை செய்கிறது நீதிமன்றம். அதன் பின்னர் விஜய் தேடி வரும் சஞ்சய் தத் தன் மகன் மீண்டும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை செய்கிறார்கள். தன் பெயர் பார்த்திபன் என அமைதியாக பேசி சஞ்சய் தத்தை அனுப்பி வைக்கிறார். இருந்தாலும் த்ரிஷாவுக்கு விஜய் மேல் சற்று சந்தேகம் வர யார் அந்த லியோ தாஸ் என்பவன் யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் உண்மையில் யார் லியோதாஸ் என்பது படத்தின் மீதிக்கதை.

விஜய் இதுவரை பார்த்த படங்களிலிருந்து முற்றிலும் மாறு பட்ட கதாப்பாத்திரம் கொஞ்சம் நரைத்த தாடி, மீசை வயதான அப்பா கதாப்பாத்திரையிலும். ப்ளாஷ்பேக் காட்சிகளில் இளமையான அதிரடியான வில்லத்தனமான கதாப்பாத்திரத்தை காட்டி நம்மை விசில் பறக்க வைக்கிறார். வழக்கமாக விஜய் படம் என்றாலே ஆக்சன் அதிரடி இருக்கும் இப்படத்தில் அதிகமான சென்டிமென்ட் காட்சிகளும் நடித்து நம்மை கண் கலங்க வைக்கிறார் விஜய். குறிப்பாக நான் லியோ தாஸ் இல்லை பார்த்திபன் என்று த்ரிஷாவிடம் கூறி கதறி அழும் காட்சிகளில் நம் கண்களை கலங்க வைது விடுகிறார்.

த்ரிஷா இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா கதாப்பாத்திரம். எப்படி இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்று நினைத்து பார்த்தால் ஆச்சர்யம். படம் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை இவருக்கும் முக்கிய பங்கு உள்ளது படத்தில் தனது வேலையை மிக மிக சிறப்பாக செய்துள்ளார் த்ரிஷா.

படத்தின் வில்லன்களாக வரும் சஞ்சய் தத், அர்ஜீன் இடைவேளைக்கு பின்னர் இவர்கள் இருவரும் வந்தாலும் மிரட்டியுள்ளனர் இருவரும். இவர்களை விட மிஷ்கின், சாண்டி, போலீஸ் அதிகாரியாக வரும் கௌதம் மேனன், பிரியா ஆனந்த் அனைவருமே அருமையாக நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது அதுவும் பின்னணி இசையில் தூள் கிளப்பி உள்ளார். படத்தில் அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியது சண்டை பயிற்சியாளர் அன்பறிவு அனைத்தும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்.

RATING 3.5/5

 

 

Trending

Exit mobile version