News

வெளியானது நான் ரெடி பாடலின் முன்னோட்டம் !

Published

on

லோகேஷ் கனக்ராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி’ பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து மன்சூர் அலிகான், அர்ஜூன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டவர்களோடு 2000 டான்ஸர்கள் நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது.

ராக்ஸ்டார் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள இப்பாடலை லோகேஷ் கனகராஜ் அவர்களின் துணை இயக்குநர் விஷ்ணு எடாவன் எழுதியுள்ளாராம். இந்த நிலையில் இப்பாடலின் முன்னோட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version