Reviews

லைகர் – விமர்சனம் !

Published

on

Movie Details

தெலுங்கு பட உலகில் மசாலா படங்களுக்கு பெயர் போனவர் பூரி ஜெகன்னாத். இவரின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் Liger.

விஜய் தேவரகொண்டா இவரின் அம்மா ரம்யா கிருஷ்ணன். பாக்சிங் வீரரான தனது கணவரை சண்டையிலேயே இழந்து விட்டு விஜய் தேவரகொண்டாவை ஒரு பாக்சிங் வீரரான சாம்பியனாகா எப்படியும் பார்க்க வேண்டும் என்று ஆசையுடன் இருக்கிறார்.

அதற்காக சென்னை ராயபுரத்திலிருந்து மும்பைக்கு சென்று அங்கு உள்ள மிக்ஸ்டு மார்ஷியம் ஆர்ட்ஸ் பள்ளியில் பணம் இல்லாமல் என் மகனுக்கு எம்.எம்.ஏ கற்றுக்கொடுக்க சொல்கிறார். முதலில் அங்குள்ள பள்ளியின் தரைகளை துடைக்கும் எடுபிடி வேலைகளை செய்யச் சொல்ல அதையும் செய்து கொண்டிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

ஒரு நாள் ஒரு கட்டத்தில் தன் முழு திறமையும் அங்குள்ள மாஸ்டருக்கு தனது திறமையை நிரூபித்து காட்டுகிறார். இதற்கு நடுவில் அனன்யா பாண்டே மீது காதலில் விழுந்து அவரே இவரை ஏமாற்றி விட அதிலிருந்து கடும் பயிற்சி எடுத்து மீண்டு வந்து தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு கொண்டு இறுதிப்போட்டியில் அனன்யா பாண்டே அண்ணனுடன் மோதி அதில் சாம்பியனும் ஆகிறார். அதன் பின்னர் அமெரிக்காவில் நடைபெறும் உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு உலக சாம்பியன் ஆக வேண்டும் என்று அங்கு செல்கிறார். அங்கு சாம்பியன் ஆனாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சாக்லெட் ஹீரோவாக பார்த்து வந்த நமக்கு இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை ஒரு முழு நீள அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்க முடிகிறது. படத்தில் விஜய் தேவரகொண்டாவின் சண்டைக்காட்சிகள் எல்லாம் அதிரடியாகவும் அனல் பறக்கும் விதமாகவும் உள்ளது. ஆனால் ஆல் இல்லாத மைதானத்தில் சிக்ஸர் அடிப்பது போல கதையே இல்லை என்பதால் அவை எல்லாம் வீணாகப்போகிறது.

கதாநாயகியாக வரும் அனன்யா பாண்டே வழக்கமான மசாலா சினிமாவில் வரும் ஹீரோயின் வேடம். நாயகனுக்கு முக்கியத்துவம் உல்ல கதையில் நாயகிக்கு வேலையே இல்லாமல் போகிறது.

விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவுக்கு பிறகு இவருக்குத்தான் இப்படத்தில் முக்கியத்துவம் சிறப்பாக நடித்துள்ளார். அனன்யா பாண்டேவின் அப்பாவாக நடித்திருக்கும் நிஜ அப்பா சன்கி பாண்டே, உலக குத்துச்சண்டை சாம்பியன் மைக் டையன் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து செல்கிறார். ஆனால் அவர் எதுக்கு ஏன் வருகிறார் என்று தெரியவில்லை.

ஆக்‌ஷன் அதிரடி காட்சிகளில் காட்டிய பிரம்மாண்டத்தையும் ஒளிப்பதிவையும் படத்திலும் படத்தின் கதையிலும் காட்டியிருக்கலாம்.

எத்தனை பெரிய உலக புகழ் நடிகர் நடிகைகள் நடித்தாலும் அப்படத்திற்காக எத்தனை கோடி செலவு செய்தாலும் கதையும் தரமான திரைக்கதையும் வேண்டும் அது இல்லாமல் பல ஆயிரம் படங்கள் படு தோல்வியடைந்துள்ளது. அந்த வரிசையில் இந்த படமும் அடங்கும்.
Liger Review By CineTimee

[wp-review id=”43746″]

Trending

Exit mobile version